tamilnadu

img

காக்கி ட்ரவுசர் போல, கோட்சேவும் ஆர்எஸ்எஸ் அடையாளம்தான்..

போபால்:

காக்கி ட்ரவுசரைச் போல, கோட்சேவும் ஆர்எஸ்எஸ்-ஸின் அடையாளம்தான் என்று சமாஜ்வாதி கட்சியின் போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆசம்கான் அதிரடியாக கூறியுள்ளார்.


மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசப்பற்றாளர் என்று மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவரும், பாஜக-வின் போபால் தொகுதி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், பாஜக-வும், அதனை எதிர்ப்பது போல ஒரு நாடகத்தை நடத்தியது. பிரக்யா சிங் கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் அறிக்கை வெளியிட்டது. அத்துடன், இதுதான் நேரமென்று, கோட்சேவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிரச்சாரத்திலும் இறங்கினர்.


இதற்கு ஆசம்கான் பதிலடி கொடுத்துள்ளார். ‘காக்கி கால்சட்டையைப் போல கோட்சேவும் ஆர்எஸ்எஸ்-ஸின் அடையாளம்தான்” என்று கூறியுள்ள ஆசம்கான், “பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது; தாக்குர் போன்றவர்களை பாஜக கட்சியிலிருந்தே தூக்கி எறிய வேண்டும்; செய்வார்களா?” என்று கேட்டுள்ளார். “நமது தேசம் காந்தி அல்லது கோட்சே யாருடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;